நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீது போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது! Vignesh Shivan

நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீது போலீஸ் நிலையத்தில் புகார்!

Nayanthara, Vignesh Shivan, Kaathu Vaakula Rendu Kadhal, AK 62 22-Mar-2022

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்தவர். நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி பல திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்கள். இந்த நிறுவனம் சார்ப்பில் வெளியான ‘கூழாங்கல்’ என்ற திரைப்படம் பல விருதுகளை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Nayanthara, Vignesh Shivan, Kaathu Vaakula Rendu Kadhal, AK 62 22-Mar-2022

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரெளடிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘ரவுடி பிக்சர்ஸ்’ என பெயர் வைப்பதா? என்றும் இது ரவுடிகளை ஊக்கப்படுத்தும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.