அனைத்து இந்தியரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும்-அமீர்கான் கருத்து! Aamir Khan

இந்தியர்களுக்கு அமீர்கான் கருத்து தெரிவிப்பு!

Aamir Khan, Pallavi Joshi, Amaan Iqbal, Vivek Agnihotri, The Kashmir Files 22-Mar-2022

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் அமீர்கான். சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து பணியாற்றி வருபவர். சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்று வரும் ஒரு படம் குறித்து அமீர்கான் கருத்து தெரிவித்துள்ளார்.

Aamir Khan, Pallavi Joshi, Amaan Iqbal, Vivek Agnihotri, The Kashmir Files 22-Mar-2022
அமீர்கான்

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற இந்தி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. 1990-களில் காஷ்மீரில் இந்து பண்டிட்கள் மீது நடந்த தாக்குதல் மற்றும் பண்டிட்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பிய சம்பவங்களை வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விவேக் அக்னிகோத்ரி இயக்கி உள்ளார். இந்த படத்துக்கு வரி விலக்கு அளிப்பதாக மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடியும், தி காஷ்மீர் பைல்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். அதேச்சமயம் இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்

இந்நிலையில் நடிகர் அமீர்கான் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ குறித்து அவரின் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பது, “‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை நான் நிச்சயமாகப் பார்ப்பேன். இது மாதிரியான தலைப்புகளில் வெளிவருகின்ற படத்தை ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டும். இதன் கதை நமது வரலாற்றைப் பேசியுள்ளது. காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்தது மிகவும் வருந்தத்தக்கது. இந்தப் படம் மனிதத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவர் மனதையும் மிகவும் ஆழமாக தொட்டுள்ளது. அதனால் நான் நிச்சயம் பார்ப்பேன்” என்று கூறியுள்ளார்.