Sherin Shringar 21st Mar 2022
Sherin Shringar, Celebrity, Fashion, Model 21st Mar 2022 : ஷெரின் 5 மே 1985 இல் பெங்களூர், கர்நாடகாவில் பிறந்தார். ஷெரின் அல்லது ஷிரின் என்ற அவரது மேடைப் பெயரால் அறியப்பட்ட ஒரு தென்இந்திய நடிகை, இவர் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார்.
ஷெரின் கன்னடத் திரைப்படமான துருவா (2002) மூலம் நடிகையாக அறிமுகமானார், அதில் அவர் கன்னட நடிகர் தர்ஷனுடன் இணைந்து நடித்தார். பின்பு இவர் தமிழில் துள்ளுவதோ இளமை, விசில், ஸ்டுடென்ட் நம்பர் ஒன், உற்சாகம், பூவா தலையா, நண்பேன்டா போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ஷெரின்.
தொடர்ந்து நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிக பிரபலமானார். அத்துடன் அதில் மூன்றாவது ரன்னர்அப் ஆகவும் வந்தார். மேலும் ஸ்டார் விஜயின் டான்சிங் சூப்பர்ஸ்டார் நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்து கொண்டார். சமூகவலைத்தளங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட ஷெரின் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.