கே.ஜி.எப்-2 ‘ படத்தின் ‘அவன் கத்தி வீசுன வேகத்துல புயலே உருவாகிடுச்சு’ – வைரலாகும் மாஸான பாடல்! KGF 2

கே.ஜி.எப்-2 பாடல் இணையத்தில் வைரல்!

Yash, Srinidhi Shetty, Sanjay Dutt, Prashanth Neel, Ravi Basrur, K.G.F: Chapter 2, KGF 2 21-Mar-2022

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ’கே.ஜி.எப்-2′ படத்தில் இடம்பெற்றுள்ள மாஸான பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘தூஃபான்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Exit mobile version