‘வாடிவாசல்’ படப்பிடிப்பில் சூர்யா-வைரலாகும் புகைப்படங்கள்! Vaadivaasal

வாடிவாசல் படப்பிடிப்பில் வெளியான புகைப்படங்கள்!

Suriya, Vetrimaaran, G. V. Prakash Kumar, Vaadivaasal 21-Mar-2022

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோ தனுஷை வைத்து அசுரன், வடசென்னை, ஆடுகளம், பொல்லாதவன் போன்ற படங்களை இயக்கி தனுஷின் நடிப்பு திறமையை திரையுலகுக்கு சிறப்பாக வெளிக்காட்டி இருந்த ஒரே இயக்குனர் வெற்றிமாறன். தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவாசல். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் வாடிவாசல் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்து வைரலாகி வருகிறது. அதில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் இயக்குனர் வெற்றிமாறனும், சூர்யாவும் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Posted

in

by