பாலா-சூர்யா கூட்டணியில் இணைந்த மற்றுமொரு பிரபல இயக்குனர்! Suriya

இயக்குனர் பாலாவுடன் இணைந்த மற்றுமொரு இயக்குனர்!

Suriya, Director Bala, Sudha Kongara 21-Mar-2022

இயக்குனர் பாலா-சூர்யா இணைந்து அடுத்து உருவாகவிருக்கும் படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஒருவர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதற்குமுன் இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சக்கைப்போடு போட்டது. தற்போது இவர்கள் மீண்டும் இணைவதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற படங்களை இயக்கிய சுதா கொங்கரா இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா மற்றும் பாலா கூட்டணியில் உருவாகும் படத்தில் சுதா கொங்கரா தயாரிப்பு நிர்வாகம் சார்ந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்குமுன் பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்தில் சுதா கொங்கரா உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.