“பீஸ்ட்” படத்தின் வெளிவந்த ரிலீஸ் தேதி – கொல மாஸ் தகவல்! Beast

வெளியான பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி!

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Satish, Yogi Babu, VTV Ganesh, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Kalanithi Maran, Sun Pictures, Thalapathy 66, , Beast 20-Mar-2022

விஜய் நடிப்பில் கடந்த வருட படமான ‘மாஸ்டர்’ படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார். விஜய் அடுத்து கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இயக்குனரான நெல்சன் திலீப்குமாரின் ‘பீஸ்ட்’ படத்தில் தற்போது நடித்துள்ளார்.

இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். பீஸ்ட் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அரபிக் குத்து’ பாடல் வெளியாகி பல ரசிகர்கள், பிரபலங்கள், சிறுவர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று பல சாதனைகள் படைத்துள்ளது. மற்றும் இப்படத்தின் ஒவ்வொரு புதிய அப்டேட் வெளியாகும் போதும் ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Satish, Yogi Babu, VTV Ganesh, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Kalanithi Maran, Sun Pictures, Thalapathy 66, , Beast 20-Mar-2022

இந்நிலையில் நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களில் இருந்து ‘பீஸ்ட்’ படம் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அந்த வகையில் பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிய வந்திருக்கிறது. இந்த தகவல் ரசிகர்களை மேலும் உற்ச்சாகப் படுத்தியிருக்கிறது.