வெளியான ஜாலியோ ஜிம்கானா – பீஸ்ட் 2வது சிங்கிள் பாடல்!
Vijay, Pooja Hegde, Selvaraghavan, Satish, Yogi Babu, VTV Ganesh, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Kalanithi Maran, Sun Pictures, Thalapathy 66, , Beast 20-Mar-2022
விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் இடம் பெற்றிருக்கும் 2வது சிங்கிளான ‘ஜாலியோ ஜிம்கானா..’ என்ற பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் யோகி பாபு, வி டி வி கணேஷ் உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தற்போது பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முதல் சிங்கிளான அரபிக் குத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2-வது சிங்கிளான ‘ஜாலியோ ஜிம்கானா…’ என்ற பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். விஜய் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து இணையத்தை கலக்கி வருகிறது.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.