நயன்தாரா இடத்தை பிடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!

நயன்தாராவின் கதாபாத்திரமாக மாறும் நடிகை!

Nayanthara, Janhvi Kapoor, Nelson Dilipkumar, Yogi Babu, Kolamaavu Kokila 19-Mar-2022

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்க தயாராகி வருகிறார்.

தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கியவரான நெல்சன் இயக்கிய முதல் படம் “கோலமாவு கோகிலா”. நயன்தாரா நடித்திருந்த இந்தப்படம் சூப்பர் ஹிட்டானது. நகைச்சுவையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் நயன்தாராவுக்கும் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து யோகி பாபு தனது கலக்கலான நடிப்பை வெளிக்காட்டியிருந்தார்.

ஜான்ஹவி கபூர்

பிற மொழிகளில் ரீமேக் செய்யப் பலரும் ஆசைப்பட்டனர். இந்தியில் தற்போது அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் ஜான்ஹவி கபூர் நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதால் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் ஜிம்மில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஜான்ஹவி கபூர்.