நிக்கி கல்ராணியை திருமணம் செய்யும் பிரபல நடிகர்!

நிக்கி கல்ராணி திருமணம் பற்றி வெளியாகியுள்ள தகவல்!

Aadhi, Nikki Galrani, Rajavamsam, Maragatha Naanayam, Darling 19-Mar-2022

தமிழ் சினிமாவிற்கு டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் யாகவா ராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயபட்டதாக கூறப்பட்டது. இதனை அவர்கள் மறுக்கவில்லை. மற்றும் மரகத நாணயம் படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்வுகளில் நிக்கி கல்ராணி பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி இருவரின் நெருக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மிருகம் படத்தில் ஆதி அறிமுகமாகி ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம், யூடர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் நிக்கி கல்ராணிக்கும், ஆதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இதனை இருவர் தரப்பிலும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.