’கே.ஜி.எப்-2′ படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்!

வெளியான ‘கே.ஜி.எப்-2’ படத்தின் மாஸான அப்டேட்!

Yash, Srinidhi Shetty, Sanjay Dutt, Prakash Raj, Malavika Avinash, Prashanth, Raveena Tandon, K.G.F, K.G.F: Chapter 2, K.G.F 2, Prashanth Neel, Ravi Basrur, Vijay Kiragandur 19-Mar-2022

கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘யாஷ்’ ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. கே.ஜி.எப்-2 படத்தின் ஒரு பாடலின் லிரிக்கல், வீடியோ மார்ச் 21ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் கே ஜி எப் முதலாம் பாகம் உருவாகி சுமார் 3 வருடங்களுக்கு மேலாகியும் கே ஜி எப் 2 ஆம் பாகத்துக்காக ரசிகர்கள் கடும் ஆர்வத்தில் இருந்தனர். இந்நிலையில் இப்படத்துக்கான ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களை எல்லையற்ற சந்தோசத்துக்கு உள்ளாகியதுடன் இப்படத்தை திரையில் பார்ப்பதற்கு பெரிதும் ஆவலாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.