அஜித்தின் AK-62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!! ரசிகர்கள் கொண்டாட்டம்

தயாரிப்பு நிறுவனத்தின் AK-62 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

Ajith Kumar, Vignesh Shivan, Nayanthara, Anirudh Ravichander, Thala 62, AK 62, AK 61 19-Mar-2022

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜித்தின் 61 வது படத்தை மீண்டும் எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அஜித்தின் 62 வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்க இருக்கிறார்கள்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாகவும், அடுத்தாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இப்படத்தை வெளியிட இருப்பதாகவும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.