ஆர்.ஜே.பாலாஜி வீட்ல விசேஷம்.. ரசிகரின் கேள்விக்கு நறுக்கென பதிலளித்தார்!

சர்ச்சையான கதையாக இருக்கு.. எடுபடுமா? ரசிகருக்கு பதிலளித்த ஆர் ஜே பாலாஜி!

RJ Balaji, NJ Saravanan, Aparna Balamurali, Sathyaraj, Urvashi, Veetla Vishesham 18-Mar-2022

இயக்குனரும் நடிகருமான ஆர் ஜே பாலாஜி நடிப்பில் அடுத்து உருவாகி வரும் ‘வீட்ல விஷேசம்’ படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி இன்று வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பதாய் ஹோ’. முழுநீள காமெடி திரைப்படமான இது ரூ.29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.

இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்.ஜே.பாலாஜி நடித்து வருகிறார். ‘வீட்ல விசேஷம்’ என்று பெயரிடப்பட்ட இப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இதில் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மற்றும் மறைந்த முன்னாள் மலையாள நடிகை லலிதாவும் இப்படத்தில் நடித்துள்ளார். மற்றும் இப்படத்தை போனி கபூரின் பே வாட்ச் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் ஜூன் மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ஆர் ஜே பாலாஜி சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி அவருக்கென ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போஸ்டர் பற்றி ரசிகர் ஒருவர் ‘சர்ச்சையான கதைக்களம். இந்த படம் தமிழகத்தில் எப்படி எதிர்கொள்ளப்படும் என உறுதியாக தெரியவில்லை’ எனக் கமெண்ட் செய்திருந்தார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாக ஆர் ஜே பாலாஜி ‘ஆமா!!! பேமிலியில் ஒருத்தர் கர்ப்பமா இருக்குற மாரி படம் எடுத்தா சர்ச்சையான கதை. ஆனா ஹீரோ, ரௌடி, டான், கொலகாரன், திருடன், கள்ளக் கடத்தல்காரனா நடிச்சா அது பேமிலி சப்ஜெக்ட் படம்’ எனத் தனக்கே உரிய பாணியில் பதில் கூறியுள்ளார். இந்த கமெண்ட்டும், ஆர் ஜே பாலாஜியின் பதிலும் இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.

Exit mobile version