துபாயில் ஆர்யா-சாயிஷா: வைரலாகும் ரொமான்டிக் புகைப்படங்கள்!

ஆர்யா-சாயிஷா புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல்!

Arya Sayyeshaa, Arya, Sayyeshaa, Captain 18-Mar-2022

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான ஆர்யா – சாயிஷா தற்போது துபாயில் இருக்கும் நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளனர். செம ரொமான்ஸ் ஆக இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா ஒரு சில படங்களில் இணைந்து நடித்த நிலையில் இருவருக்கும் காதல் உண்டாகியது. இதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது என்பதும் இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது துபாயில் எக்ஸ்போ நடப்பதை அடுத்து பல திரையுலக பிரபலங்கள் சென்று வரும் நிலையில் ஆர்யா மற்றும் சாயிஷாவும் சமீபத்தில் துபாய் சென்றனர். துபாயில் இருக்கும் போது அழகிய புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வரும் சாயிஷா மேலும் துபாயில் தனது கணவர் ஆர்யாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த ரொமான்ஸ் புகைப்படத்தை பிரியா அட்லி உள்பட சுமார் ஒரு லட்சம் பேர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஆர்யா தற்போது ’கேப்டன்’ மற்றும் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஓர் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.