சன்னி லியோன் ரசிகரின் செயல் வீடியோ வைரல்!
Sunny Leone, Mammootty, Daniel Weber 17-Mar-2022
பாலிவுட் திரைப்படங்களில் நடித்து அதிகம் புகழ் பெற்ற சன்னி லியோனுக்கு நாடளாவிய ரீதியில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், டேனியல் வெபர் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட சன்னி லியோன், ஒரு பெண் குழந்தையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

மேலும், வாடகைத் தாய் மூலம், இரட்டை குழந்தைகளையும் சன்னி லியோன் மற்றும் டேனியல் ஆகியோர் வளர்த்து வருகின்றனர். சமீப காலமாக, ஹிந்தி, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அதிக திரைப்படங்கள் கையில் வைத்துள்ள நடிகை சன்னி லியோன், மிகவும் பிசியாக நடித்து வருகிறார். தமிழில், ‘OMG’ மற்றும் மலையாளத்தில் ‘ஷீரோ’ ஆகிய திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்கள் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

திரைப்படங்களில், எந்த அளவுக்கு பிசியாக நடித்து வந்தாலும், மற்றொரு பக்கம், சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பதற்கும் சன்னி லியோன் தவறுவதில்லை. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரீல்ஸ் வீடியோக்கள், படப்பிடிப்பின் போது நடைபெறும் சம்பவங்கள், கணவருடனான புகைப்படங்கள், சிறப்பு விருந்தினராக செல்லும் இடங்களில் மக்கள் அளிக்கும் வரவேற்பு என அனைத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதை சன்னி லியோன் வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய ரசிகர் ஒருவரைக் குறித்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சன்னி லியோன் வெளியிட்டுள்ள வீடியோ, அதிகம் வைரலாகி வருகிறது. இதில், தாவணியில் இருக்கும் சன்னி லியோனின் அருகில் ரசிகர் ஒருவர் நிற்க, அவரது கையில் ‘சன்னி லியோன்’ என பச்சைக் குத்தப்பட்டுள்ளது.

இதற்காக தன்னுடைய ரசிகருக்கு நன்றி சொல்லும் சன்னி லியோனின் கேப்ஷன் தான் மிகப் பெரிய ஹைலைட்டாக உள்ளது. “நீங்கள் என்றென்றும் என்னை நேசிக்க வேண்டி இருக்கும் என நான் நம்புகிறேன். ஏனென்றால், உங்களுக்கு வேறு வழியில்லை. நீங்கள் மனைவியை கண்டுபிடிப்பதற்கு அதிர்ஷ்டம் வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய பெயரை பச்சைக் குத்தியுள்ளதால், இன்னொரு பெண் அதனை ஏற்றுக் கொண்டு மனைவியாக வருவாரா என்பதைத் தான், சன்னி லியோன் அப்படி காமெடியாக தன்னுடைய கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.