தனுஷால் ஹாட் ஸ்டார் நிறுவனத்துக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. விபரீத முடிவை கையில் எடுக்கும் ஓடிடி நிறுவனம்!!

தனுஷ் படத்தால் ஏற்பட்ட இழப்பு!

Dhanush, Karthick Naren, Malavika Mohanan, Samuthirakani, Ameer Sultan, Vikram Prabhu, Sathya Jyothi Films, Taanakkaran, Maaran 17-Mar-2022

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் சில நாட்களுக்கு முன் மாறன் திரைப்படம் வெளியானது. மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இப்படத்தைக் காண ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு மாறன் திரைப்படம் பெரிய ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது.

தனுஷ் எப்படி இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று அவரது ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படி பல எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்த இந்த திரைப்படத்தை பிரபல ஹாட் ஸ்டார் நிறுவனம் வாங்கி வெளியிட்டிருந்தது.

இப்படத்தால் லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிறுவனத்திற்கு அதிர்ச்சி தான் கிடைத்தது. மேலும் வரிசையாக மொக்கை படங்களை இந்த நிறுவனம் வெளியிட்டு வருவதால் இந்த தளத்தை சப்ஸ்க்ரைப் செய்திருந்த பலரும் தற்போது அதிலிருந்து வெளியேறி உள்ளார்களாம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹாட் ஸ்டார் நிறுவனம் எப்படியாவது விட்ட இடத்தை பிடித்தே ஆக வேண்டும் என்று தீவிர முயற்சி செய்து வருகிறதாம். இதனால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வகையில் திரைப் படங்களை வாங்கி வெளியிட அந்த நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.

அதற்காக ஒரு விபரீதம் முயற்சியில் ஹாட்ஸ்டார் களமிறங்கி இருக்கிறது. அது என்னவென்றால் ஹாட்ஸ்டார் அடுத்ததாக விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டானாக்காரன்’ என்ற திரைப்படத்தை வாங்கி வெளியிட இருக்கிறது. இப்படம் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

தனுஷால் இழந்த பெயரை விக்ரம் பிரபுவின் மூலம் பிடித்துவிடலாம் என்று ஹாட்ஸ்டார் கனவு கண்டு கொண்டிருக்கிறது. ஆனால் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது பெரும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சுமாரான வெற்றியை கூட பெறவில்லை. அவரை நம்பி களத்தில் இறங்கும் ஹாட்ஸ்டார், விட்ட இடத்தை பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.