பீஸ்ட் படத்தின் “ஜாலியோ ஜிம்கானா” வெளியான ப்ரோமோ!
Vijay, Pooja Hegde, Selvaraghavan, Yogi Babu, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Thalapathy 66, Kalanithi Maran, Sun Pictures 17-Mar-2022
தளபதி விஜய், ‘மாஸ்டர்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தின் முதல் சிங்கிளான அரபிக்குத்து பாடல் கடந்த பிப்ரவரி 14 அம் தேதி வெளியாகி இன்ஸ்டண்ட் ஹிட் ஆனது. அது மட்டுமில்லாமல் ரிலீஸ் ஆனது முதல் இப்போதுவரை இணையத்தில் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. தற்போது வரை இந்த பாடலைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 150 மில்லியனைக் கடந்துள்ளது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலர் இந்த பாடலுக்கு தங்கள் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த முதல் சிங்கிள் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாய் நேற்று ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள செகண்ட் சிங்கிள் பாடலான ‘ஜாலியோ ஜிம்கானா..’ பாடலை 19.03.2022 அன்று வெளியிட உள்ளதாகவும், அதன் 30 செகண்ட் ப்ரோமோ வீடியோ ஒன்றையும் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். இந்த பாடலை கு. கார்த்திக் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலின் ப்ரோமோவில் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியவர்கள் இடம்பெற்றுள்ளனர். நெல்சன் முதல் முதலாக தன்னுடைய படத்தில் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக விஜய் பாடும் பாடல்கள் துள்ளலிசை பாடல்களாகவே இருக்கும். அதை உறுதி செய்வது போலவே இப்போது வெளியாகியுள்ள 30 செகண்ட் ப்ரோமோவே இந்த பாடல் ஒரு செம்மயான பார்ட்டி சாங்காக இருக்கபோவதை தெரிவித்துள்ளது.

இப்பாடலில் அனிருத், நெல்சன் மற்றும் விஜய் ஆகிய மூவரும் நடனமாடும் விதமாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ப்ரோமோவில் இடம்பெற்றுள்ள ‘ரா மம்மா ஹே ராமம்மா ஜாலியா ஜிம்கானா ராசம்மா ஹே ராசம்மா சொல்றது சர்தானா’ என்ற வரிகள் ரசிகர்களைக் கவரும் விதமாக அமைந்துள்ளன.