ரஜினிக்கு தங்கச்சி ஆகும் வளர்ந்து வரும் நடிகை.. கேரியருக்கே ஆப்பு வைக்கும் நெல்சனின் முடிவு!

ரஜினிக்கு தங்கச்சியாக வளரும் நடிகை!

Thalaivar 169, Rajinikanth, Nelson Dilipkumar, Kalanidhi Maran, Anirudh Ravichander, Priyanka Mohan, Keerthy Suresh 16-Mar-2022

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் வசூல் சாதனை படைத்ததாக சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியானது.

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா போன்ற பல நடிகைகள் நடித்து இருந்தனர். அதில் ரஜினிக்கு தங்கையாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். அண்ணாத்த படம் கீர்த்தி சுரேஷுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. ஏனென்றால் தங்கச்சி சென்டிமென்ட் அந்த அளவிற்கு கீர்த்தி சுரேஷுக்கு செட்டாகவில்லை.

அண்ணாத்த படம் வெளியான பிறகு கீர்த்தி சுரேஷ் காண அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் ஏண்டா அண்ணாத்த படத்தில் நடித்தோம் என்ற அளவிற்கு பல நாட்கள் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்களிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் தற்போது நெல்சன் ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 169 படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்திற்கு தங்கச்சியாக பிரியங்கா மோகன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்து இருந்தார். மற்றும் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஜினியுடன் இணையும் பிரியங்கா மோகனுக்கு இந்த படத்தில் தங்கச்சி சென்டிமென்ட் செட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒரு பக்கம் தங்கச்சி கேரக்டரில் நடித்தால், அடுத்து தங்கச்சி சென்டிமென்ட் படங்களில் நடிக்க வைத்து விடுவார்கள் என்ற அச்சத்தில் இருக்கிறார் பிரியங்கா மோகன்.