திருட்டு வழக்கில் கைதாகிய பிரபல நடிகை! அதிர்ச்சியில் திரையுலகம்

பணத்தை திருடிய பிரபல நடிகை கைது!

Rupa Dutta, Aaj Bbhi 16-Mar-2022

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ரூபா தத்தா திருட்டு வழக்கில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்சிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரூபா தத்தா. இவர் சமீபத்தில் இயக்குனர் அனுராக் கஷ்யாப் தனக்கு ஆபாச செய்தி அனுப்பியதாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் சர்வதேச புத்தக கண்காட்சியில் திருடியதாக நடிகை ரூபா தத்தா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்விழாவிற்கு வந்த நடிகை ரூபா தத்தா குப்பைத் தொட்டியில் மணி பர்ஸ் ஒன்றை வீசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் நடிகை ரூபா தத்தாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில் அவர் முன், பின்னாக முரணாக பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விதான் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் தான் புத்தகக் கண்காட்சியில் திருடியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவரிடமிருந்து சில மணி பர்ஸ்களும் ரூ.70 ஆயிரம் பணமும் மீட்கப்பட்டுள்ளது. பிரபல நடிகையே வழக்கில் கைதாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.