பாலாவுடன் களமிறங்கும் சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகை! லேட்டஸ்ட் அப்டேட்

சூர்யாவின் அடுத்த படத்தில் இணையும் பிரபல நடிகை!

Suriya, Priyanka Mohan, Pandiraj, Bala, Krithi Shetty, D. Imman, Etharkkum Thunindhavan 16-Mar-2022

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்து பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.

இதற்குமுன் இந்த கூட்டணியின் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. தற்போது இவர்கள் மீண்டும் இணைவதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தெரிகிறது.

க்ரிதி ஷெட்டி

இந்த கூட்டணியில் இணையவிருக்கும் கதாநாயகி குறித்து பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தற்போது இதனை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை க்ரிதி ஷெட்டி நடிக்கவுள்ளதாக தகவல் தெரிய வருகிறது.

க்ரிதி ஷெட்டி

இவர் இதற்கு முன் தெலுங்கு படமான உப்பென்னா, ஷ்யாம் சிங்க ராய் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.