அஜித் படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்!
Ajith Kumar, H. Vinoth, Boney KApoor, AK 61, Vignesh Shivan, Nayanthara 16-Mar-2022
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை மீண்டும் எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் மோகன் லால் அல்லது நாகார்ஜூனா இருவரில் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும், இவர்களுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அஜித்துடன் மலையாள நடிகரான மோகன் லால் நடிப்பதற்கே அதிகளவான வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது அஜித்குமார் அவர்களின் 62-வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.

தற்போது ‘காதுவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கி முடித்துள்ள விக்னேஷ் சிவன், அஜித்குமாரின் அடுத்த படத்தின் பணிகளை தற்போதே தொடங்கி விட்டதாகவும், இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்தத் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றும் இப்படத்தில் நடிக்கும் மற்றைய நடிகர்கள், நடிகைகள் தகவல் பற்றி படக்குழு விரைவில் அறிவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.