நடிகர் லாரன்ஸுடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! வெளியான தகவல்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லாரன்ஸ்!

Raghava Lawrence, Aishwarya R. Dhanush, Aishwarya Rajinikanth, Dhanush, Rajinikanth 15-Mar-2022

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ஏற்கனவே 2012 இல் வெளியான “3” படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து “வை ராஜா வை” படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் இருவரும் நடித்திருந்தார்கள். அதன் பின் ஐஸ்வர்யா வேறு படங்கள் இயக்கவில்லை.

தற்போது, முசாபிர் என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி உள்ளார். இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்சும், ஐஸ்வர்யாவும் திடீரென்று சந்தித்து பேசி உள்ளனர். இருவரும் சந்தித்த புகைப்படங்களை ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, அன்பான அண்ணன் லாரன்சை சந்தித்த பிறகு எனது மூளை இன்னும் வேகமாக செயல்படுகிறது என்று கூறியுள்ளார்.

இதன்மூலம், லாரன்ஸ் நடிக்கும் படத்தை ஐஸ்வர்யா இயக்க இருப்பதாக தகவல் பரவி உள்ளது. இதுகுறித்து லாரன்ஸ் கூறுகையில், நாங்கள் இருவரும் அண்ணன் தங்கை பாச உணர்வில் சந்தித்தோம். தொழில் ரீதியிலான சந்திப்பாகவும் இது அமைந்தது. இந்த சந்திப்பில் ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது. அதை ஐஸ்வர்யா ஒரு வாரத்தில் அறிவிப்பார் என்று கூறினார்.