பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் நடிப்பில் கூகுள் குட்டப்பா படத்தின் டிரைலர்!

தர்ஷன்-லாஸ்லியா நடிக்கும் கூகுள் குட்டப்பா பட டிரைலர்!

Tharshan, Losliya, K. S. Ravikumar, Yogi Babu, Koogle Kuttappa, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate 15-Mar-2022

மலையாளத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. ‘கூகுள் குட்டப்பா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, பிராங்ஸ்டர் ராகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்கி உள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது.

மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக உருவாகி இருக்கும் ‘கூகுள் குட்டப்பா’ டிரைலர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.