விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! வெளியாகியுள்ள மாஸ் அப்டேட்!

கமலின் விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது!

Kamal Haasan, Fahadh, Vijay Sethupathi, Arjun Das, Shivani Narayanan, Kalidas Jayaram, Andrea Jeremiah, Narain, Myna Nandhini, Lokesh Kanagaraj, Anirudh Ravichander, Raaj Kamal Films International, Vikram, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate 14-Mar-2022

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘விக்ரம்’. கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ‘விக்ரம்’ படத்தை ஜூன் 3 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.