சம்யுக்தாவின் லேட்டஸ்ட் பேஷன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் 14 மார்ச் 2022

Samyuktha Shan 14th Mar 2022

Samyuktha Shan, Actress, Celebrity, Model, Bigg Boss Tamil 14th Mar 2022

சம்யுக்தா சண்முகநாதன் மே 5, 1984 இல் சென்னையில் பிறந்தார். மாடெலிங் துறையில் இருக்கும் சம்யுக்தா 2007 இல் மிஸ் சென்னை பட்டம் வென்றார். இவர் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து எட்டாவது வாரத்தில் பெற்ற ரசிகர்களின் வாக்கு எண்ணிக்கையால் வெளியேறினார்.

சம்யுக்தா மலையாள திரைப்படமான ஒலு, விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் போன்றவற்றில் நடித்துள்ளார். இவர் சன் தொலைக்காட்சியின் நாடகத் தொடரான சந்திரமுகியிலும் நடித்துள்ளார். இவர் தற்போது இயக்குனர் சுந்தர்.சி இயக்கும் படம் ஒன்றில் நடித்து வருகின்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் பேஷன் துறையிலும் தமிழ் சினிமாவிலும் பிரகாசித்து வரும் சம்யுக்தா, சமூகவலைத்தளங்களில் அதிகளவிலான ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலயில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்யுக்தா கொடுத்த போட்ஷூட் படங்கள் வைரலாகி வருகின்றன. இதோ அந்த படங்களின் இணைப்பு.