மாறனில் ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் இன்னும் அதை தேடிக் கொண்டேயிருக்கிறார்கள்!!!

ஓடிடியில் மாறனின் பல காட்சிகளை வேகமாக ஓடவிடவே தோன்றுகின்றது

Maaran, Karthick Naren, Dhanush, Malavika Mohanan, Samuthirakani, Smruthi Venkat, G.V.Prakash Kumar 12th Mar 2022

ஒரு நேர்மையான பத்திரிகையாளராக இருந்து வருகிறார் ராம்கி. இவர் ஒரு ஊழலை வெளிப்படுத்தியதற்காக ரவுடி கும்பலால் கொலை செய்யப்படுகிறார். அதன் பின்பு ராம்கியின் மகனான ஹீரோ தனுஷ் அவரது தங்கை ஸ்ம்ருதி வெங்கட்டுடன் மாமனார் ஆடுகளம் நரேனுடன் வளர்ந்து வருகின்றார். தந்தை ராம்கி போலவே நேர்மையான பத்திரிகையாளராக இருக்கிறார் தனுஷ். அப்போது பிரபல அரசியல்வாதியான சமுத்திரக்கனியின் சதிவேலையை பத்திரிகை மூலமாக வெளிக்கொணர்கிறார் தனுஷ். இதனால் சீற்றமடையும் சமுத்திரக்கனி தனுஷின் தங்கையை கொன்றுவிடுகிறார். பின்பு தனுஷ் சமுத்திரக்கனியை எப்படி எதிர்கொண்டார் என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஹீரோ தனுஷ், கலகலப்பான நடிப்பு தங்கை பாச செண்டிமெண்ட் என ஓரளவு நடித்திகிறார். ஹீரோயின் மாளவிகா மாடர்ன் லுக்கில் ரசிக்க வைக்கிறார். தங்கை ஸ்ம்ருதி வெங்கட் வெகுளியாக நடித்திருக்கிறார். சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், ராம்கி ஆகியோரின் நடிப்பு படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்க்கிறது. அமீர் சிறிய காட்சியில் தோன்றினாலும் அவர் பெயரை பார்வையாளர்களை பேச வைக்கிறார்.

Maaran Movie Review

பத்திரிகையாளர்கள் மையமாகக் கொண்டுள்ள இப் படத்தை துருவங்கள் பதினாறு புகழ் கார்த்திக் நரேன் இயக்கியிருக்கிறார். அண்ணன், தங்கை செண்டிமெண்ட், பல காட்சிகள் பழைய படங்களை நினைவு படுத்துகிறது. திரைக்கதை படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் பொல்லாத உலகம் ரசிகர்களை ஆட வைக்கிறது. ஜி.வி. பின்னணி இசையிலும் தனது பங்களிப்பை சரியாக வழங்கியிருக்கிறார். விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு பேசும்படியாக இல்லை.

*** ஓடிடியில் இதை பார்க்கும்போது படத்தின் பல காட்சிகளை வேகமாக ஓடவிடவே தோன்றுகின்றது . மாறனில் ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் இன்னும் அதை தேடிக் கொண்டேயிருக்கிறார்கள். தனுஷ் நடித்த படங்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது – “மாறன்” அவ்வளவு தான்.