சமூக வலைத்தளத்தில் சமந்தா வெளியிட்ட புகைப்படங்கள்!
Samantha Ruth Prabhu, Samantha, Naga Chaitanya, Kaathu Vaakula Rendu Kadhal, Vignesh Shivan, Vijay Sethupathi, Nayanthara, 11-Mar-2022
நடிகை சமந்தா தனது புதிய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்த வேளை அவரின் ரசிகர்கள் மூலம் லைக்குகள் குவிந்து வருகிறது.

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பின்பு பலமொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சமந்தா. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்துக்கொண்டார்.
இவர் கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண உறவு 4 ஆண்டுகள் நீடித்து வந்த நிலையில் திடீரென தனது கணவரை பிரிந்தார். அதன் பின்னர் இவர் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடிப்பதில் முழுகவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தில், சமந்தா ஆடிய ’ஓ சொல்றியா மாமா’ பாடல் சில எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், நடிகை சமந்தா கருப்பு பச்சை உடை அணிந்து வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.