சிவாங்கியோடு ரொமான்ஸ் செய்த பிரபல ஹீரோ!
Sivaangi Krishnakumar, Pugazh, Ashwin Kumar Lakshmikanthan, KPY Bala, Manimegalai, super singer, Cooku with Comali – Season 3, Cooku with Comali, valimai, Etharkkum Thunindhavan, Don, Yaanai 11-Mar-2022
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

கடந்த சீசனில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிகமாக கவனிக்கப்பட்டவர்கள் புகழ், சிவாங்கி மற்றும் அஷ்வின் ஆகியோர். அவர்களில் அஷ்வின் சினிமாவில் ஹீரோவாகிவிட்டார். சிவாங்கியும் சிவகார்த்திகேயனின் டான் சினிமா மூலமாக அறிமுகமாகிறார். அதுபோலவே புகழ் ஏற்கனவே பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

முன்னணி நடிகரான அஜித்தோடு அவர் நடித்த வலிமை படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி அவரது கதாபாத்திரத்துக்கு வரவேற்புக் கிடைத்தது. இந்நிலையில் இப்போது புகழ் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள மற்றைய நடிகர்களின் படங்களான யானை, டான் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் எதற்கும் துணிந்தவன் படத்திலும் சூர்யாவுடன் நடித்திருக்கிறார்.

இதற்கிடையில் குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கியுள்ளது. இந்த சீசனில் அவர் முதலில் போட்டியாளராகக் கலந்துகொள்ளவில்லை. அதனால் ரசிகர்கள் பலரும் அவரை மிஸ் பண்ணுவதாக பேசப்பட்ட நிலையில் சர்ப்ரைஸாக தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் அவ்வப்போது வருகை தருவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இப்போது கலகலப்பாக நடந்து வரும் நிகச்சியில் சர்ப்ரைஸாக இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்போது குக் வித் கோமாளியில் நடிகர் துல்கர் சல்மான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார். அவர் நடித்துள்ள ‘ஹே சினாமிகா படத்தின்’ ப்ரமோஷனுக்காக கலந்துகொண்ட அவர் கோமாளிகளோடு இணைந்து அலப்பறையில் ஈடுபட்டார். அதிலும் சிவாங்கியோடு அவர் ஓகே கண்மணியில் நித்யா மேனனோடு பேசும் ரொமான்ஸ் காட்சியை திரும்ப நடித்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதுமட்டுமில்லாமல் சிவாங்கியை பைக்கில் அமரவைத்து செட்டை சுற்றிவந்து நிகழ்ச்சியை மேலும் கலகலப்பாக்கியுள்ளார். இது சம்மந்தமான ப்ரமோ வெளியாகி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.