‘எதற்கும் துணிந்தவன்’ அசுரவேகத்தில் இணையத்தில் லீக்கானது.. படக்குழு அதிர்ச்சியில்!

எதற்கும் துணிந்தவன் படம் இணையத்தில் வைரல்!

Suriya, Priyanka Mohan, Vinay Rai, Sathyaraj, Soori, Pandiraj, D. Imman, Kalanithi Maran, Sun Pictures, Etharkkum Thunindhavan 11-Mar-2022

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸானது. இந்த படத்திற்கு யூடியூப் விமர்சகர்கள், ஊடகங்கள் மற்றும் இணைய தளங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கூறிவருகின்றனர்.

சூர்யா நடிப்பில் சுமார் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு, இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு அவரின் நடிப்பில் வெளியாகியிருந்த சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய இரண்டு திரைப்படங்களும், ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. காப்பான் திரைப்படத்துக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் சூர்யாவின் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’.

இந்த படத்தில் சூர்யாவுடன் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், பிரியங்கா மோகன், வினய், புகழ் மற்றும் சூரி ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நாளில் பான் இந்தியத் திரைப்படமாக இப்படம் வெளியாகி உள்ளது. நேற்று காலை வெளியான இத்திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நேரத்தில், படம் வெளியான முதல் நாளே தமிழ்ராக்கர்ஸ், மூவிரூல்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட இணையதளங்களில் படம் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.

இணையத்தில் படம் திருட்டுத்தனமாக வெளியானது படக்குழுவுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடையை மீறி படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளதை அடுத்து, தயாரிப்பு நிறுவனம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லீக்கான அடுத்த நொடியில் காட்டுத்தீ போல் பரவியதால், அனைவரும் படத்தை டவுன்லோடு செய்யத் தொடங்கிவிட்டனர்.