எதற்கும் துணிந்தவன் படத்தில் அரபிக் குத்து பாடல் கொண்டாடும் ரசிகர்கள்!
Suriya, Vijay, Priyanka Mohan, Pooja Hegde, Selvaraghavan, Yogi Babu, Sathyaraj, Soori, Vinay Rai, Rajkiran, Pandiraj, Nelson Dilipkumar, D. Imman, Anirudh Ravichander, Kalanithi Maran, Sun Pictures 10-Mar-2022
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் உலகம் முழுவதும் இன்று தியேட்டரில் ரிலீசாகி உள்ளது. மூன்று வருடங்களுக்கு பிறகு தியேட்டரில் ரிலீசாகும் சூர்யா படம் என்பதாலும், வித்தியாசமான கேரக்டரில் சூர்யா நடித்திருப்பதால் இந்த படம் ரசிகர்களிடம் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் நாள் முதல் ஷோ அதிகாலை 5 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த படம் அனைத்து தரப்பிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்பார்த்ததை விட சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது மட்டுமின்றி குடும்ப ரசிகர்களை இந்த படம் அதிகம் கவர்ந்துள்ளது. முதல் பகுதி இடைவேளை வரை என்டர்டைன்மென்ட் படமாகவும், இரண்டாம் பகுதி அழுத்தமான மெசேஜ் சொல்வதாகவும் உருவாகி உள்ளது.

இப்படம் மொத்தம் இரண்டரை மணி நேரம் ஓடும், மற்றும் படத்தின் முதல் பகுதி ஒரு மணி நேரம் 15 நிமிடம் 9 விநாடிகள் ஓடுகிறது.
படத்தின் முதல் பகுதி முடிந்ததும் இடைவேளையின் போது விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்டு, சாதனை படைத்து வரும் “அரபிக்குத்து” பாடல் திரையிடப்படுகிறது. சூர்யா படத்தில் அரபிக்குத்து பாடல் திரையிடப்படுவது பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும் படத்தையும் தாண்டி, அரபிக்குத்து பாடலை ரசிகர்கள் ரசித்து கொண்டாடி வருகின்றனர்.

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்காக சிவகார்த்திகேயன் வரிகளில், அனிருத் இசையமைத்து பாடி உள்ள அரபிக்குத்து பாடல் காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. இந்த பாடல் யூட்யூப்பில் தற்போது வரை 150 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. உலக அளவில் மிக குறுகிய காலத்தில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட பாடல்களின் பட்டியலில் அரபிக்குத்து பாடலும் இடம்பிடித்துள்ளது.