“நீ முன்னொரு காலத்தில குதிரையா இருந்திருக்காய்” குதிரைவால் டிரைலர்!

கலையரசனின் வெளிவந்த “குதிரைவால்” டிரைலர்!

Kalaiyarasan, Anjali Patil, Shyam Sundar, Manoj Leonel Jason, Pradeep Kumar, Neelam Productions; Yaazhi Films, Kuthiraivaal, Karthi, Arya 10-Mar-2022

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் நடிகர் கலையரசன். இவர் மிஸ்கின் இயக்கி நடித்த ‘நந்தலாலா’ படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் தோன்றி அவரின் நடிப்பு திறமையால் பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்தியுடன் இணைந்து அவருக்கு இணையாக நடித்ததன் மூலம் அனைவரையும் கவர்ந்தவர். அது மட்டுமின்றி அவரின் சிறந்த நடிப்புக்கான பல விருதுகளையும் பெற்றவர்.

மற்றும் மெட்ராஸ் படம் தொட்டு இறுதியாக ஆர்யாவுடன் இணைந்து ‘சார்பட்டா’ படத்திலும் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் கலையரசன்.

தற்போது பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன், யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேசன் இணைந்து தயாரித்திருக்கும் படமான ‘குதிரைவால்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஜி.ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார்.

கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சலி பாட்டீல், சவுமியா ஜகன் மூர்த்தி, ஆனந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் மார்ச் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் டீசர் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று ‘குதிரைவால்’ படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. குதிரைவால் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வானது குறிப்பிடத்தக்கது.