ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சிம்பு! வைரலாகும் தகவல்..

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சிம்புவுடன் களம் இறங்குகிறார்!

Aishwarya Dhanush, Aishwarya Rajinikanth, Dhanush, Rajinikanth, Simbu, Silambarasan, Bigg Boss tamil, Bigg Boss Ultimate 10-Mar-2022

ஐஸ்வர்யாக ரஜினிகாந்த் தனுஷுடனான பிரிவிற்கு பிறகு சமீப நாட்களில் சமூக வலைத்தளங்களிலும் மீடியாக்களிலும் தொடர்ந்து பேசு பொருளாக காணப்படுகிறார். சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். இந்த பிரிவு அவருடைய ரசிகர்களையும் திரைதுறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமின்றி பலர் இவர்களுக்கு ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர்.

ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தையும், கௌதம் கார்த்திக்கை வைத்து ‘வை ராஜா வை’ என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். சினிமா சண்டைக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் அவர் எடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா-தனுஷ் திருமண உறவு முறிந்த பிறகு, ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. அதன்படி ஐஸ்வர்யா தனது முசாபிர் மியூஸிக் ஆல்பம் வீடியோ வேலைகளை ஆரம்பித்து அது குறித்த அறிவிப்புகளை தொடர்ச்சியாக அறிவித்து வந்தார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் ஹீரோவாகியுள்ளார் சிம்பு. அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் சிம்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனுஷிற்கு போட்டியாளராக ஒரு காலத்தில் சிம்பு கருதப்பட்டார். இருதரப்பு ரசிகர்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்ட சம்பவங்களும் இருந்தது. இந்நிலையில் சிம்புவை வைத்து ஐஸ்வர்யா படமியக்கவுள்ளது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.