செல்வராகவன் நடிப்பில் உருவாகியிருக்கும் படத்தின் செம லுக்கான புகைப்படங்கள்! சால்ட் அண்ட் பெப்பர் தாடி

வெளிவர இருக்கும் செல்வராகவன் படத்தின் புகைப்படங்கள்!

Selvaraghavan, Keerthy Suresh, Arun Matheswaran, Saani Kaayidham, Beast, Vijay, Thalapathy 66, Nelson Dilipkumar, Anirudh Ravichander 10-Mar-2022

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, காதல் கொண்டேன், போன்ற வெற்றிப் படங்களைத் தந்த, திறமையான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன், முதன்முறையாக ஒரு நடிகராக ‘சாணிக்காயிதம்’ படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இந்த படத்தை ‘ராக்கி’ படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதல் ரசிகர்கள் ஆர்வமாக இந்த படத்துக்காகக் காத்திருக்கின்றனர்.

செல்வராகவன் நடித்துள்ள ‘சாணிக்காயிதம்’ திரைப்படம் ரிலிஸாகும் முன்னரே இப்போது அவர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். நடிப்பில் இப்படி பிஸியாக இருந்தாலும் தன்னுடைய இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் நானே வருவேன் படத்தையும் இயக்கி வருகிறார். 8 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் செல்வராகவன் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

சாணிக் காயிதம் படத்தில் இயக்குனர் செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்கிரீன் சீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படத்தின் சில போஸ்டர்கள் மற்றும் படப்பிடிப்பு தளப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி எல்லோரின் கவனத்தைப் பெற்றன. இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகர் செல்வராகவன் தன்னுடைய சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கையில் துப்பாக்கியுடன் இருட்டான இடத்தில் முறைத்துப் பார்க்கும் தோற்றத்துடன் செல்வராகவன் அந்த புகைப்படத்தில் நிற்கிறார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த பதிவில் கமெண்ட் செய்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘வாவ்…. செல்வா அத்தான் சூப்பர்’ எனக் கமெண்ட் செய்து பாராட்டியுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் உருவான புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம், மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்பது குறித்த அப்டேட்களை செல்வராகவனிடம் ரசிகர்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பார்ட் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என செல்வராகவன் ஒரு போஸ்டரை வெளியிட்டு இருந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.