தல அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு ரெடி!! கொல மாஸ்

AK 61 படத்தின் தலைப்பு பற்றி வெளிவந்த தகவல்!

Ajith Kumar, Ajith, H. Vinoth, Boney Kapoor, Huma Qureshi, Kartikeya Gummakonda, Yogi Babu, Pugazh, Valimai, Vallamai 10-Mar-2022

அஜித் நடித்து வெளியான ‘வலிமை’ படத்திற்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பைக் கொடுத்திருந்தாலும் சிலர் கடுமையாக விமர்சனத்தை வைத்திருந்தார்கள். படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறதென்று கருத்து முன் வைக்கப்பட்டது. இதனால் படம் வெளியான இரண்டாம் நாளே இருபது நிமிடங்கள் குறைக்கப்பட்டது. நல்ல வசூல் செய்திருந்தபோதும் படத்தைப் பற்றி எதிர்மறையான கருத்து ஏன் வருகிறது என்று அஜித் கண்காணிக்க ஆரம்பித்தார். அதன் குறைகள் எடுத்து வைக்கப்பட்டது.

எதிர் மறையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் ‘வலிமை’ வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளது. மேலும் அஜித் ரசிகர்கள் நீண்ட இடைவேளையின் பின் அஜித் படம் திரைக்கு வந்ததையிட்டு பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடி தீர்த்தார்கள்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை போனி கபூர் நிறுவனமே தயாரிக்கிறது. அப்படத்தையும் வினோத் இயக்குகிறார். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஆந்திராவில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணாசாலை போல் பிரமாண்ட செட் போடப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்குப் பாரதியாரின் கவிதைகளிலிருந்து ‘வல்லமை’ என்ற சொல்லை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த ஆண்டே ’வல்லமை’ படம் வெளியாகும் என்று அஜித் தரப்பில் கூறப்படுகிறது.

மீண்டும் வினோத், அஜித், போனி கபூர் கூட்டணி இணைந்திருக்கும் இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் எதிர் பார்ப்பும் வரவேற்பும் இருக்கிறதாக தெரிகிறது. அஜித்தின் வல்லமை படத்தின் லுக் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. வலிமையில் விட்டதை வல்லமையில் நிவர்த்தி செய்வர் வினோத் என்று நம்பப்படுகிறது.