சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சூர்யா! ஜி வி பிரகாஷ் குமார் தகவல்!

மீண்டும் சுதா கொங்கராவுடன் இணைய இருக்கும் சூர்யா!

Suriya, Sudha Kongara Prasad, G. V. Prakash Kumar, Pandiraj, D. Imman, Kalanithi Maran, Sun Pictures, Priyanka Mohan, Soori, Sathyaraj, Vinay Rai 09-Mar-2022

சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெளிவரவிருக்கும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கிருக்கும் இப்படம் இம்மாதம் வரும் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதன் பின் பாலா மற்றும் வெற்றிமாறன் ஆகியோரின் படங்களில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் சுதா கொங்கராவுடன் சூர்யா இணையவுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘செல்ஃபீ’ படத்தில் கெளதம் மேனன் மற்றும் ஜி.வி பிரகாஷ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களுடன் ஜி.வி பிரகாஷ் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் சூர்யா-சுதா கொங்கரா இருவரின் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஜி.வி பிரகாஷ், “கண்டிப்பாக இருவரும் இணைகிறார்கள், இந்தாண்டின் இறுதியில் இப்படத்திற்கான அறிவிப்பு வரலாம், அதற்கான வேலைகள் நடந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். இது சூர்யா ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.