சர்தார் படத்தின் தெறிக்கும் புதிய மாசான BTS புகைப்படங்கள்!
Karthi, Rajisha Vijayan, Rashi Khanna, P.S. Mithran, G. V. Prakash Kumar, S. Lakshman Kumar, Sardar 09-Mar-2022
நடிகர் கார்த்தியின் 22வது படம் சர்தார் ஆகும். கடைசியாக கார்த்தி நடிப்பில் சுல்தான் படம் திரை அரங்கில் வெளியானது. சர்தார் படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் சில தினங்களுக்கு முன்பு சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றது. சென்னையில் சர்தார் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர். ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படத்தை ‘இரும்புத்திரை’ மற்றும் ‘ஹீரோ’ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

தற்போது சென்னை படப்பிடிப்பில் ராஷிகண்ணாவும் இணைந்துள்ளார். சென்னையில் தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பு நிறைவுற்றதும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் மைசூரில் நடைபெற உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கார்த்தி, மித்ரன் இருக்கும் BTS புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. போலிஸ் தோரணையில் கார்த்தி இந்த புகைப்படங்களில் உள்ளார். கார்த்தி உடன் ஒரு சிறுவனும் உள்ளார்.

மித்ரன் படம் என்றாலே ரசிகர்களுக்கு கடும் எதிர்பார்ப்பு இருக்கும், கிரைம், திரில்லர் சாராம்சங்களை கொண்டு மிக சிறப்பாக கதையை நகர்த்தக்கூடிய திறமை வாய்ந்தவர். இந்நிலையில் மித்ரன், கார்த்தி கூட்டணி என்பதால் கார்த்தி ரசிகர்கள் கூட பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.