உங்கள முதல் தடவ ‘முழுசா’ பாத்த ‘லக்கி காய்’ யாரு..? ரசிகரின் கேள்விக்கு கூலாக பதில் சொன்ன பிக்பாஸ் பிரபலம்!!

ரசிகரின் அந்தரங்க கேள்விக்கு கூலாக பதில் சொன்ன பிக்பாஸ் பிரபலம்!

Yashika Aannand, JEEVA, Bestie, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, Kamal Haasan, Simbu, Silambarasan 09-Mar-2022

ஜீவா நடிப்பில் ‘கவலை வேண்டாம்’ படத்தில் சிறு கதாபாத்திரம் ஒன்றின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதனைத் தொடர்ந்து, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ , ‘ஜாம்பி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு, பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில், யாஷிகா ஆனந்த் போட்டியாளராக களமிறங்கிய நிலையில், மேலும் மக்கள் மத்தியில் அவருக்கு அதிக புகழ் கிடைத்தது. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த், பல படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.

இதனிடையே, கடந்த ஆண்டு ஜூலை மாதம், தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கினார் யாஷிகா ஆனந்த். இந்த விபத்தில், அவரது நெருங்கிய தோழி உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த யாஷிகா, சுமார் 4 மாதங்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது அவர் குணமடைந்துள்ள நிலையில், மீண்டும் சினிமா, சமூக வலைத்தளம் என அனைத்திலும் ஆக்டிவாக யாஷிகா ஆனந்த் வலம் வருகிறார். இந்நிலையில், ரசிகர்கள் தன்னிடம் இன்ஸ்டாக்ராமில் கேட்ட கேள்விகளுக்கு யாஷிகா பதிலளித்து வந்தார். அதில் பலரும் யாஷிகாவின் தோழி மறைவு குறித்து பல உருக்கமான கருத்துக்களை பதிவிட்டு, யாஷிகாவுக்கு ஆறுதல் சொல்லி வந்தனர்.

அதே போல, ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு மிகவும் வெளிப்படையாகவும் யாஷிகா பதிலளித்து இருந்தார். அந்த வகையில் ரசிகர் ஒருவர், “உங்களை முதல் முதலில் நிர்வாணமாக பார்த்த ‘Lucky Guy’ யார்?” என்ற கேள்வியை முன் வைத்தார்.

அதனை கூலாக எடுத்துக் கொண்ட யாஷிகா, “டாக்டர் என்று நினைக்கிறேன்” என பதிலளித்துள்ளார். இதற்கு முன்பாகவே, ரசிகர்கள் தன்னை பற்றி பதிவிடும் கருத்துக்களுக்கும், கேள்விகளுக்கும் வெளிப்படையாக பதில் சொல்லி, யாஷிகா அதிகம் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.