‘கேஜிஎப்’ பட இயக்குனர் இயக்கத்தில் பிரபாஸ் – ஸ்ருதிஹாசன் நடிக்கும் படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபல முன்னணி ஹீரோ!

பிரபாஸ் – ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘சலார்’ படம் பற்றிய மாசான தகவல்!

Prabhas, Prithviraj Sukumaran, Shruti Haasan, Prashanth Neel, Salaar, Ravi Basrur, K.G.F Chapter 2, Yash, Srinidhi Shetty, Prakash Raj, Prashanth, Radhe Shyam, Pooja Hegde, Radha Krishna Kumar 09-Mar-2022

பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

பாகுபலி படத்தின் வெற்றியால் பிரபாஸின் படங்களுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த 5 மொழிகளில் வெளியாவதால் அனைத்து மொழிகளிலும் பிஸியாக படக்குழுவினர் ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த படத்துக்கு இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. மார்ச் 11 ஆம் தேதி இந்த படம் இந்தியா முழுவதும் ரிலிஸாகிறது.

கேஜிஎப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் இப்போது கேஜிஎப் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகிறது.

இதையடுத்து இவர் பிரபாஸ் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரோடு இணைந்து பணியாற்ற உள்ளார். இதில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் படத்துக்கு ‘சலார்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படமும் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது, இதில் பிரபாஸோடு ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ராதே ஷ்யாம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிரபாஸ் ‘சலார்’ படம் பற்றியும் பேசியுள்ளார். அதில் தன்னுடன் மலையாள முன்னணி நடிகரான பிருத்விராஜ் நடிப்பதை அவர் உறுதி செய்துள்ளார். பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர். தமிழிலும் “மொழி” உள்ளிட்ட சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்.

இதனிடையே சமீபகாலமாக மலையாளத்தில் முன்னணியில் இருக்கும் நடிகர்களுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதில் முன்னணியில் இருப்பவர் பஹத் பாசில். தமிழில் விக்ரம், மாமன்னன் ஆகிய படங்களில் நடித்துவரும் அவர் சமீபத்தில் நடித்த புஷ்பா படம் இந்தியா முழுவதும் வெற்றிபெற்றது. அந்த வரிசையில் இப்போது பிருத்விராஜும் இணைந்துள்ளார். ‘சலார்’ படம் கேஜிஎப் போல ஆக்‌ஷன் படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.