“தளபதி 66” படத்தில் விஜய்க்கு ஜோடி சேர போகும் நடிகை இவங்களா!! தெறிக்கும் தகவல்!

தளபதி 66 இல் விஜயுடன் ஜோடி சேரும் நாயகி பற்றிய தகவல்!

Vijay, Prakash Raj, Vamshi Paidipally, Rashmika Mandanna, S. Thaman, Nelson Dilipkumar, Pooja Hegde, Anirudh Ravichander, Yogi Babu, Thalapathy 66, Beast 08-Mar-2022

கோலிவுட்டில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஜய். தளபதி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் கடைசியாக திரையில் காணப்பட்டார்.

மாஸ்டர் படம் கொரோனா இடைவேளையின் பின் திரைக்கு வந்து அமோக வெற்றி பெற்றது. அனைவராலும் வரவேற்கப்பட்ட படமாக அமைந்திருந்தது. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் தனது 65 வது படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் , ஒரு சிங்கிள் (அரபிக்குத்து) பாடல் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் காட்டு தீ போல் பரவி வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022இல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர். பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மற்றும் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் தளபதி விஜய்யுடன் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் பணிபுரிவது பற்றி சில நாட்களுக்கு முன் இசையமைப்பாளர் தமன் டிவிட்டரில் சூசகமாக அறிவித்தார். அதே போல் எடிட்டராக பிரவீன் கே எல் பணிபுரிவதாக செய்திகள் வந்தன. மேலும் இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தமிழில் சுல்தான் படத்தில் நடித்தவர். தெலுங்கில் புஷ்பா, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.