பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஷிவானி நாராயணன் வராங்களா!அவங்களே சொன்ன லேட்டஸ்ட் தகவல்!

ஷிவானி நாராயணன் பகிர்ந்த மகிழ்ச்சியான தகவல்!

Shivani Narayanan, Losliya Mariyanesan, Kamal Hassan, vijay sethupathi, RJ Balaji, Vadivelu, Vikram, Simbu, Silambarasan, VJS 46, Naai Sekar Returns, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate 08-Mar-2022

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 30ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, அபினய், ஷாரிக் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். வனிதா தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாக கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

கமல்ஹாசன் ‘விக்ரம்’ பட ஷூட்டிங் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விலகியதால் சிம்பு தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வெளியேற்றப்பட்ட செய்யப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தியும், விஜய் டிவி காமெடியன் சதீஷும் வைல்டு கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

மற்றும் பிக்பாஸ் அல்டிமேட்டிற்கு நடிகை லாஸ்லியா வைல்டு கார்டு என்ட்ரி மூலம் வருகை தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். இந்நிலையில் மற்றொரு பிரபல நடிகையான ஷிவானி நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட்டில் தனது வருகை குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.

ரசிகர் ஒருவர் பிக்பாஸ் அல்டிமேட் போவிங்களா? என கேட்க, ஏராளமான படங்களில் நடிக்க வேண்டி இருப்பதால் பிக்பாஸ் அல்டிமேட்க்கு செல்ல வாய்ப்பு குறைவு என ஷிவானி கூறியுள்ளார்.

மேலும் வடிவேலுவுக்கு ‘ஜோடியாக நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில்ல் நடிகை ஷிவானி நாராயணன் நடிக்கிறார். R J பாலாஜி இயக்கி நடிக்கும் புதிய படத்திலும் நடிகை ஷிவானி நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே ஷிவானி VJS-46 படத்தில் ஷிவானி விஜய் சேதுபதியுடன் போலிசாக நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘விக்ரம்’ படத்தில் முன்பே நடிகை ஷிவானி நடித்து முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.