ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படைப்பிற்கு வாழ்த்து கூறிய கார்த்திக் சுப்பராஜ்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த செயலுக்கு வாழ்துக்கள் கூறிய பிரபல இயக்குனர்!

Karthik Subbaraj, Rajinikanth, Aishwarya Rajinikanth, Aishwarya Dhanush, Dhanush, Gautham Karthik, Anirudh Ravichander 08-Mar-2022

சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். பலர் இவர்களுக்கு ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர். இந்த பிரிவு அவருடைய ரசிகர்களையும் திரைதுறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தையும், கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். சினிமா சண்டைக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் அவர் எடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா-தனுஷ் திருமண உறவு முறிந்த பின்பு, ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. அதன்படி ஐஸ்வர்யா தனது மியூஸிக் ஆல்பம் வீடியோ வேலைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

பின் இதற்கான பணிகள் ஹைதராபாத்தில் அவர் தொடங்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் இப்பாடல் உருவாகியுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி என பல கலைஞர்கள் பாடியுள்ளனர்.

இந்நிலையில், இப்பாடல் இன்று (08-03-2022) வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். அத்துடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு வாழ்த்துத்தும் தெரிவித்துள்ளார்.