18 வருட வாழ்க்கை முடிந்த நிலையில்.. தனுஷ், ஐஸ்வர்யாவை தொடர்ந்து மீண்டும் ஓர் பிரபலம் விவாகரத்து!

பிரபல இயக்குனர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்!

Director Bala, Vikram, Vijay, Suriya, Arya, Atharvaa, Ajith, Dhruv Vikram, G. V. Prakash Kumar, Jyothika, Adithya Varma 08-Mar-2022

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் ‘சேது’, ‘நந்தா’, ‘பிதாமகன்’ தொடங்கி பல முக்கியமான படங்களை இயக்கி இருந்தார். இயக்குனராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் ‘சேது’, ‘நந்தா’, ‘பிதாமகன்’ தொடங்கி பல முக்கியமான படங்களை இயக்கி இருந்தார். இயக்குனராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் பாலா – சூர்யா கூட்டணியில் ஒரு படம் தயாராகி வருகிறது. ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களுக்குப் பிறகு பாலா – சூர்யா கூட்டணி இணைந்திருப்பதால் படத்துக்கு ஏற்கெனவே பல எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் இயக்குனர் பாலாவும் அவர் மனைவி முத்துமலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள்.

இச்செய்தி திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை தொடர்ந்து இயக்குனர் பாலாவும் இந்நிலைக்குள்ளாக்கியமை பெரும் வருத்தத்துக்கு உரிய விடயமாகும். கடந்த 4 வருடங்களாக பாலாவும் அவர் மனைவி முத்துமலரும் மனதளவில் பிரிந்திருந்த நிலையில், தற்போது இருவரும் சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்திருக்கிறார்கள்.

இயக்குனர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் கடந்த 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 18 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.