பாகுபலி 3 இல் நடிப்பதற்கு ஆர்வம் காட்டும் பிரபாஸ்! வெளியான சுவாரஸ்யமான தகவல்!

பாகுபலி 3 பற்றி மனம் திறந்து பேசிய பிரபாஸ்!

Prabhas, Pooja Hegde, Bhagyashree, Jayaram, Sathyan, Radha Krishna Kumar, T-Series Films UV Creations, Radhe Shyam, Baahubali 3, S. S. Rajamouli 07-Mar-2022

பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ், தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் அதிகளவு ரசிகர்களை திரட்டிக்கொண்டார். பாகுபலி 3 ஆம் பாகம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் ஆம் பாகம் படங்களில் நடித்ததன் பின்னர் பிரபாஸ் படங்கள் பன்மொழிகளில் வெளியாகின்றன. தற்போது பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள “ராதே ஷியாம்” படமும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வருகிறது. சென்னை வந்த பிரபாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘நான் அதிக சம்பளம் வாங்குவதாக பேசுகிறார்கள். எனது படங்கள் 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒருமுறைதான் வெளியாகிறது. சம்பளம் பற்றி பேசினால் வரி பிரச்சினை வரும். நேரடியாக தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது. எனக்கு பொருத்தமான பெண் அமைந்ததும் திருமணம் செய்து கொள்வேன். பாகுபலி 3 ஆம் பாகம் வருமா? என்று பலரும் என்னிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

எத்தனை படங்களில் நடித்தாலும் பாகுபலியை என்னால் மறக்க முடியாது. பாகுபலி 3 ஆம் பாகத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அதை தொடங்குவது இயக்குனர் ராஜமௌலி கையில் தான் உள்ளது. மற்றும் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நான் நடித்துள்ள ‘ராதே ஷியாம்’ படத்தில் கைரேகை நிபுணராக வருகிறேன். காதல் கதையாக பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது’’ என்று கூறியுள்ளார்.

தற்போது பிரபாஸ் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘ராதே ஷியாம்’ படத்துக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.