டாப்ஸியின் லேட்டஸ்ட் பேஷன் புகைப் படங்கள் இணையத்தில் வைரல் 7 மார்ச் 2022

Taapsee Pannu 7th Mar 2022

Taapsee Pannu, Actress, Celebrity, Model 7th Mar 2022

டாப்ஸி ஆகஸ்ட் 1, 1987 இல் புது தில்லியில் பிறந்தார். இவர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துவரும் ஒரு இந்திய நடிகை ஆவார். தமிழ் திரையுலகில் 2010 ம் ஆண்டு வெற்றிமாறனின் ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷுடன் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி . இவர் தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர், அனபெல் சேதுபதி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார்.

இதைவிட மிஸ்டர் பெர்பாக்ட், வீரா, மோகுடு, தருவு, ஷடோவ், சஹாஸம் போன்ற தெலுங்கு படங்களில் நடித்த இவர் ஹிந்தியில் பேபி, பிங்க், ஜூட்வா 2, சூர்மா, முல்க், பட்லா, மான்மரஜியான், மிஷன் மங்கல், தப்பட், ரஷ்மி ராக்கெட் மற்றும் அண்மையில் வெளிவந்த லூப் லப்பட ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் நடிகை டாப்ஸி, சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த படங்களின் தொகுப்பு.