வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்? G.V. பிரகாஷ் குமார் கொடுத்த சூப்பர் தகவல்!

நடிகர் விஜய் – வெற்றிமாறன் இணையும் படம் பற்றிய மாசான தகவல்!

Vijay, Atlee, Vetrimaaran, Lokesh Kanagaraj, Vamshi Paidipally, G. V. Prakash Kumar, Anirudh Ravichander, Talapathy 66, Thalapathy 67, Beast, Sun Pictures, Kalanithi Maran 07-Mar2022

கோலிவுட்டில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர் விஜய். தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் கடைசியாக திரையில் வந்தார்.

நடிகர் விஜய், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் தனது 65 வது படமான ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர். பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு சமீபத்தில் தான், இவரது அடுத்த படம் தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து துவங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் அடுத்த 67 & 68 வது படத்தின் இயக்குனர்களாக லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லியின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வெற்றிமாறன் – விஜய் இணையும் படம் பற்றி டிவிட்டரில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜி.வி. பிரகாஷ் பதில் அளித்துள்ளார். அதில், மீண்டும் விஜய்யுடன் இணைய காமெண்டஷன் அமைய வேண்டும் எனவும், வெற்றிமாறன் – விஜய் இணையும் படத்தில் நீங்கள் பணிபுரிவீர்களா? என கேட்டதற்கு கால்சீட், செட்யூல் சரியாக அமைந்து, விஜய்- வெற்றிமாறன் தற்போது பணிபுரியும் படங்கள் முடிந்த பின் இந்த கூட்டணி அமையலாம் என ஜி.வி. பிரகாஷ் கூறியுள்ளார்.