அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிப்பு!

ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியீடு!

Arjun, Aishwarya Rajesh, G. Arul Kumar, Dinesh Lakshmanan, Theeyavar Kulaigal Nadunga 05-Mar-2022

பிரபல நடிகர் மட்டுமின்றி சிறந்த இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் அர்ஜுன். தற்போது தனக்கு ஏற்றவாறு வில்லன் கதாப்பாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து மிகச்சிறப்பாக அவரின் தனித்துவமான நடிப்பின் மூலமும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அர்ஜுன் திரைத்துறையில் அப்பப்போ வந்து போனாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் அப்படியே தான் இருக்கிறது.

இவருடன் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், புதிய கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘தீயவர் குலைகள் நடுங்க’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘தீயவர் குலைகள்’ நடுங்க படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளப்பக்கத்தில் வைரலாகி வருகிறது. ஜி.எஸ்.ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஜி.அருள் குமார் தயாரிப்பில், தினேஷ் இலெட்சுமணன் இயக்குகிறார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பரத் ஆசீவகன் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார்.