தல அஜித்தின் அடுத்து AK 61 படத்துக்கான புதிய மாசான அப்டேட்!

அஜித்தின் AK- 61 படத்தின் புதிய தகவல்!

Ajith, Ajith Kumar, H. Vinoth, Boney Kapoor, Valimai, Ak 61 05-Feb-2022: வலிமை படத்தை தொடர்ந்து அஜித் அடுத்து நடிக்கவிருக்கும் AK 61 படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் அஜித்-வினோத் கூட்டணியில் வலிமை படம் தயாராகி திரைக்கு வந்தது. இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதிகமான பைக் காட்சிகள், அம்மா சென்டிமெண்ட் என கலவையான விமர்சனங்கள் படத்திற்கு எழுந்திருந்த போதிலும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்தனர். வலிமை படம் வெளியான 3 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலை எட்டியது.

இந்த நிலையில் அடுத்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இது அவருக்கு 61-வது படம். இப்படத்திற்கு இசையமைக்க ஜிப்ரான் இணைந்துள்ளார். மற்றும் மீண்டும் போனி கபூர் தயாரிப்பிலே AK 61 உருவாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு தேதி தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி படத்தின் பூஜை மார்ச் 9 ஆம் தேதி எனவும் படப்பிடிப்பு மார்ச் 18 ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கப்படுகிறதாக கூறப்படுகிறது.