பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்ற ஜீவி படத்தின் 2 ஆம் பாகம் பற்றிய அறிவிப்பு!

ஜீவி படத்தின் 2 ஆம் பாகம் தொடர்பான தகவல் வெளியீடு!

Vetri, Monica Chinnakotla, Karunakaran, V J Gopinath, Babu Tamizh, Jiivi 05-Mar-2022: வி ஜே கோபிநாத் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ‘ஜீவி’ படம் வெளியானது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்தது மட்டுமின்றி இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த வெற்றியின் நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்தன.

மற்றும் சர்வதேச பட விழாக்களிலும் இப்படத்திற்கு விருதுகள் கிடைத்தன. இதனிடையே, ஜீவி படத்தின் 2 ஆம் பாகம் உருவாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் நடிகர் வெற்றியும், விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று ஜீவி-2 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். ஜீவி இரண்டாம் பாகத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் வெற்றி, இயக்குனர் விஜே கோபிநாத், இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி என முதல் பாகத்தில் பணியாற்றிய அதே கூட்டணியுடன் ஜீவி இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இதன் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் சமூக வலைத்தள்த்தில் கொண்டாடி வருகின்றனர்.