அம்ரிதா ஐயரின் லேட்டஸ்ட் பேஷன் புகைப் படங்கள் இணையத்தில் வைரல் 5 மார்ச் 2022

Amritha Aiyer 5th Mar 2022

Amritha Aiyer, Actress, Celebrity, Model 5th Mar 2022 : அமிர்தா ஐயர் 1994 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தார். படிப்பை முடித்துவிட்டு மாடல் ஆனார். அவர் ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

அம்ரிதா தமிழில் படைவீரன் (2018) திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு விஜய் ஆண்டனியுடன் காளி, விஜய்யுடன் பிகில், ஜி.வி.பிரகாஷ் குமாருடன் வணக்கம் டா மாப்பிளே, கவினுடன் லிஃப்ட் ஆகிய படங்களில் நடித்தார். கிஷோர் திருமலா இயக்கிய ராம் பொத்ன்னி ஜோடியாக ரெட் (2021) என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அவரது தெலுங்கு திரைப்படங்கள் 30 ரோஜுல்லோ பிரேமிஞ்சதம் ஏலா, அர்ஜுனா பால்குனா போன்றவையாகும்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்ட அம்ரிதா ஐயர், சமீபத்தில் இணையத்தில் வெளியான அழகான போட்ஷூட் படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அந்த வைரலான படங்களின் தொகுப்பு இதோ.