சிம்பு படத்தில் பிரபல ஹீரோ வில்லன்! தமிழில் தொடர் படங்களைக் கைப்பற்றும் நடிகர்..!

சிம்புவுக்கு வில்லனாகும் மலையாள ஹீரோ!

Simbu, Silambarasan, Aditi Shankar, Gokul, Fahadh Fassil, Javed Riaz, Vijay Sethupathi, Vels Film International, Corona Kumar 04-Mar-2022: மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பகத் பாசில். இவர் தமிழ் சினிமாவில் ‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தற்போது கமல்ஹாசனுக்கு வில்லனாக ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதிஸ்டாலின் நடிக்கும் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் கோகுல் இயக்கும் ‘கொரோனா குமார்’ திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க பகத் பாசிலிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தின் தொடர்ச்சியாக கொரோனா குமார் திரைப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது.